லக்னோ: உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ரீட்டா பகுகுணா ஜோஷியின் வீட்டை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து காங்கிரஸ் எம்.பி. அஸாருதீன் தலைமையில் நூற்றுக்கணக்கான காங்கிரஸார் பேரணி நடத்தி கைதாகினர்.
வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துக் கொண்ட பின்னர் அஸாருதீன் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாகக் கிளம்பிநார். இதையடுத்து போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்து அப்புறப்படுத்தினர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Read: In English
தனது தொகுதியான மொராதாபாத்தில் காங்கிரஸ் கட்சியினரைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார் அஸாருதீன். ரீட்டாவின் கைதையும், அவரது வீட்டை எரித்த செயலையும் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துக் கொண்ட பின்னர் அஸாருதீன் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாகக் கிளம்பிநார். இதையடுத்து போலீஸார் அவரைத் தடுத்து நிறுத்தி கைது செய்து அப்புறப்படுத்தினர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.










