Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

டோனி பிளேர் மனைவிக்கு ஸ்வைன் ப்ளூ

Published: Friday, July 17, 2009, 14:53 [IST]

 Former British Pms Wife Cherie Blair

லண்டன்: முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரின் மனைவி செர்ரிக்கு பன்றிக் காய்ச்சல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

பன்றி காய்ச்சல் உலகம் முழுவதும் 100 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை இந்த நோயக்கு நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். சுமார் ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் மட்டும் இதுவரை 29 பேர் இந்த நோயால் தாக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

இந் நிலையில் செர்ரி பிளேரையும் இந்த நோய் தாக்கியுள்ளது. திடீரென அவர் காய்ச்சல், சளியால் அவதிப்பட்டதால் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் ஸ்வைன் ப்ளூ வைரஸ் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்ட அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது கணவர், குழந்தைகளையும் நோய் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவர்களுக்கு நோய்த் தாக்குதல் இல்லை என்று தெரியவந்துள்ளது.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
2nd Test , Headingley, Leeds
Match starts at 03:30 pm IST  
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Match starts at 08:00 pm IST