ஐஎம்எப்பிடம் 4.5 பில்லியன் வாங்கும் இந்தியா

செவ்வாய்க்கிழமை, ஜூலை 21, 2009, 14:44 [IST]
வாஷிங்டன்: பொருளாதாரச் சரிவைச் சமாளிக்க சிறப்பு எடுப்பு உரிமை (Special Drawing Rights - SDR) மூலம் இந்தியா 4.5 பில்லியன் டாலர்களை சர்வதேச நிதி அமைப்பிடமிருந்து கடனாகப் பெறுகிறது.

வரும் ஆகஸ்ட் இறுதிக்குள் இந்தத் தொகை இந்தியாவின் கைக்கு வந்துவிடும்.

ஐஎம்எப்பில் உறுப்பினராக உள்ள நாடுகள் தங்கள் பொருளாதார நெருக்கடியைச் சரிப்படுத்த அல்லது நிதி நிலையை சீராக வைத்துக்கொள்ள, ஐஎம்எப்பில் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கோட்டாவிலிருந்து குறிப்பிட்ட அளவு எஸ்டிஆரைப் பெறலாம். ஐஎம்எப்பில் இது கரன்ஸி மாதிரி கையாளப்படுகிறது.
  Read:  In English 
வருகிறத ஆகஸ்ட் 7-ம் தேதி இந்தத் தொகையை இந்தியாவுக்கு வழங்குவது குறித்த தீர்மானம் ஓட்டுக்கு விடப்படும். 85 சதவிகித வாக்குகளைப் பெற்ற நாடுகளுக்கு ஆக 28-ம் தேதி இந்த நிதி வழங்கப்படும்.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்தத் தொகை எளிதில் கிடைத்துவிடும் என்பதால், பொருளாதார நடவடிக்கைகளை முடங்கிவிடாமல் தடுத்து, மீண்டும் வளர்ச்சிப் பாதையில் நடைபோடலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets