ராஞ்சி: பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாவோயிஸ்டுகள் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மாவோயிஸத்தை நாட்டிலிருந்தே ஒழித்து விடுவேன் என்று கூறியுள்ளார். அது வெறும் கனவு. மாவோயிஸ்ட் இயக்கத்தை முடிப்பது என்பது இயலாத காரியம்.
ப.சிதம்பரத்திற்குத் தைரியம் இருந்தால் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வரட்டும் பார்க்கலாம்.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு ராஜீவ் காந்திக்கு ஏற்பட்ட கதிதான் நேரும்.
இந்த அறிக்கையை, ஜார்க்கண்ட் மாநில மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் அனூப்ஜி என்பவர் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவோயிஸ்டுகள் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மாவோயிஸத்தை நாட்டிலிருந்தே ஒழித்து விடுவேன் என்று கூறியுள்ளார். அது வெறும் கனவு. மாவோயிஸ்ட் இயக்கத்தை முடிப்பது என்பது இயலாத காரியம்.
ப.சிதம்பரத்திற்குத் தைரியம் இருந்தால் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வரட்டும் பார்க்கலாம்.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு ராஜீவ் காந்திக்கு ஏற்பட்ட கதிதான் நேரும்.
Read: In English
ஜார்க்கண்ட் மாநில, காங்கிரஸ் தலைவர்கள் உடனடியாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். கட்சியிலிருந்து விலக வேண்டும். இல்லாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது.இந்த அறிக்கையை, ஜார்க்கண்ட் மாநில மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் அனூப்ஜி என்பவர் வெளியிட்டுள்ளார்.