Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

மனைவிக்கு சீட் இல்லை-தேமுதிக செயலாளர் விலகல்

Published: Wednesday, July 29, 2009, 14:21 [IST]

தூத்துக்குடி: இடைத் தேர்தலில் போட்டியிட தனது மனைவிக்கு சீட் கிடைக்காகதால் தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் நகர தே.மு.தி.க. செயலாளர் ராஜேந்திரன்
தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் நகர தே.மு.தி.க. செயலாளராக இருப்பவர் ராஜேந்திரன். இவர் தனது மனைவி ராஜேஸ்வரிக்கு, ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு கட்சி தலைமையிடம் விண்ணப்பித்திருந்தார். ஆனால்
ராஜேஸ்வரிக்கு சீட் கிடைக்கவில்லை.

அதனால், ராஜேந்திரன், தனது நகர செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை கட்சியின் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் தசரத பாண்டியனிடம் கடிதம் கொடுத்தார்.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST