மும்பை தாக்குதலில் கொல்லப்பட்ட 4 தீவிரவாதிகள் பாகிஸ்தானியர் - பாக். ஒப்புதல்

திங்கள்கிழமை, ஆகஸ்ட் 10, 2009, 17:16 [IST]
இஸ்லாமாபாத்: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த நான்கு பேரை தங்களது நாட்டவர் என்று பாகிஸ்தான் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.

மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலை லஷ்கர் இ தொய்பா அமைப்புதான் நடத்தியது. அதில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளில் கசாப் தவிர மற்ற 9 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்.

இவர்களை முதலில் பாகிஸ்தானியர்கள் என்று அந்த நாடு ஒப்புக் கொள்ளவே இல்லை. அதற்கான ஆதாரங்களைத் தருமாறு உப்புச் சப்பில்லாத காரணங்களைக் கூறி தட்டிக் கழித்து வந்தது.

இருப்பினும் இந்தியா உறுதியான ஆதாரங்களை தொடர்ந்து கொடுத்து வந்தது.
  Read:  In English 
இந்த நிலையில் முதல் முறையாக, கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் நான்கு பேர் தங்களது நாட்டவர் என்று பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது.

மும்பை பிணவறையில் இன்னும் இந்த 9 பேரின் உடல்களும் வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets