ஸ்வைன் பலி 17 ஆனது-மகாராஷ்டிரத்தில் இன்று 3 பேர் சாவு

புதன்கிழமை, ஆகஸ்ட் 12, 2009, 9:46 [IST]
டெல்லி: பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை முதல் பிற்பகல் வரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

புனேவில் மட்டும் நேற்று 3 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் முதல் பலி ஏற்பட்டுள்ளது. மும்பையில் ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்மு-காஷ்மீர், மேகலாயா மாநிலங்களுக்கும் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. ஹைதராபாத்தில் உலக பேட்மிண்டன் போட்டித் தொடரையும் பன்றிக் காய்ச்சல் பீதிக்குள்ளாக்கியுள்ளது.

தேசிய அளவில் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1000த்தைத் தாண்டியுள்ளது. இதனால் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

மும்பையில் அரசு மருத்துவமனைகளுக்கு உதவியாக தனியார் மருத்துவமனைகளும் பன்றிக் காய்ச்சல் சிகிச்சை நடவடிக்கைகளில் குதித்துள்ளன.

பல்வேறு நகரங்களில் ஏராளமான பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவையும் ஆங்காங்கு மூடப்பட்டு வருகின்றன.

அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை மத்திய குழுக்களை அனுப்பி பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உதவ அனுப்பியுள்ளது.

புனே மோசமாக பாதிப்பு..

பன்றிக் காய்ச்சலுக்கு மோசமாக பாதிக்கப்பட்ட நகரம் புனேதான். இங்கு மட்டும் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை சஞ்சய் மிஸ்திரி என்ற 35 வயது நபர் உயிரிழந்தார். சசூன் மருத்துவமனையில் அவர் இறந்தார்.

அதே மருத்துவமனையில் 50 வயதான பெண் ஒருவர் இன்று பிற்பகலில் பலியானார்.

இந்த நிலையில் இன்று புனேவைச் சேர்ந்த பாபு கெனு குலந்த் என்ற பள்ளி மாணவன் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானான்.

அதே போல நாசிக்கில் மருத்துவர் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்கு இன்று பலியாகியுள்ளார்.

இதன் மூலம் மகாராஷ்டிராவில் பன்றிக் காய்ச்சலுக்கு இறந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மொத்த எண்ணிக்கை 17 ஆகியுள்ளது.

பாபுவையும் சேர்த்து புனேவில் 9 பேர் இதுவரை இறந்துள்ளனர்.

கேரளாவில் முதல் பலி...

கேரளாவில் நேற்று பன்றிக் காய்ச்சலுக்கு முதல் பலி ஏற்பட்டது. திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 35 வயதான வில்சன் என்பவர் உயிரிழந்தார்.

வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்த அவர் நாடு திரும்பி சமீபத்தில் தமிழகம் சென்றிருந்தார். அங்கு போய் விட்டு வந்த அவருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து கிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 3 நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நிமோனியாவும் கூடவே வந்தது.

இந்த நிலையில் நேற்று வில்சன் மரணமடைந்தார்.

இவர்கள் தவிர நேற்று ஆர்யா முரளி (வதோதரா), சயாதா தோஷிவாலா (தானே), ஸ்ருதி கவதே (புனே) ஆகியோரும் உயிரிழந்தனர்.

அடுத்தடுத்து 2 பேர் பலி

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டாக்டர் ரூபேஷ் கங்குர்தே என்பவர் இன்று காலை மரணமடைந்தார்.

அதேபோல, புனேவைச் சேர்ந்த 29 வயது ஷ்ராவனி தேஷ்பாண்டே என்ற பெண் வர் இன்று காலை மரணமடைந்தார்.

இவர்கள் இருவரும் சில மணி நேரங்களில் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.

இதுவரை புனே நகரில் 9 பேரும், நாசிக், மும்பை, அகமதாபாத், சென்னை, வதோதரா, திருவனந்தபுரம், தானே ஆகிய நகரங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை உயிரிழ்நதோர் விவரம்.

புனே - ரீதா ஷேக் (14-), சஞ்சய் கோக்ரே (42), டாக்டர் பாபாசாஹேப் மானே (36), சஞ்சய் திலேகர் (36), ஸ்ருதி காவ்தே (13), சஞ்சய் மிஸ்திரி (13), ஷ்ராவனி தேஷ்பாண்டே (29), பாபு கெனு குலந்த்.

மும்பை - பஹீமிதா பான்வாலா (53).

தானே - சயாதா தோஷிவாலா (63).

அகமதாபாத் - பிரவீன் படேல் (43).

வதோதரா - ஆர்யா முரளி (7).

சென்னை - சஞ்சய் (4).

திருவனந்தபுரம் - வில்சன் லூக்காஸ் (35).

நாசிக் - ரூபேஷ் கங்குர்தே.

சென்னையில் 3 குழந்தைகள் பாதிப்பு..

அகமதாபாத் - பிரவீன் படேல் (43).

வதோதரா - ஆர்யா முரளி (7).

சென்னை - சஞ்சய் (4).

திருவனந்தபுரம் - வில்சன் லூக்காஸ் (35).

நாசிக் - ரூபேஷ் கங்குர்தே
  Read:  In English 
டெல்லியில் 3 பேருக்கு பாதிப்பு:

டெல்லியில் பன்றிக் காய்ச்சல் அறிகுறி காரணமாக 3 பேர் ஆர்.எம்.எல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets