சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.
கோயம்புத்தூர் கவுண்டம்பாளையத்தில் மாலை நடக்கவிருக்கும் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்கபதற்காக ப.சிதம்பரம் இன்று காலை சுமார் 6.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெட் ஏர்வேசின் ஏடிஆர்-72 ரக விமானத்தில் கிளம்பினார்.
விமானம் பத்திரமாக தரையிறங்கியது. பின்னர் காலை 8.35 மணிக்கு அவர்கள் ஜெட் ஏர்வேஸின் மற்றொரு விமானம் மூலம் கோயம்புத்தூர் சென்றனர்.
கோயம்புத்தூர் கவுண்டம்பாளையத்தில் மாலை நடக்கவிருக்கும் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்கபதற்காக ப.சிதம்பரம் இன்று காலை சுமார் 6.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜெட் ஏர்வேசின் ஏடிஆர்-72 ரக விமானத்தில் கிளம்பினார்.
Read: In English
விமானம் பறக்க ஆரம்பித்து 30 நிமிடங்கள் ஆன நிலையில் அதன் ஒரு என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் காலை சுமார் 7.45 மணிக்கு சென்னை விமான நிலையத்துக்கு திருப்பப்பட்டது.விமானம் பத்திரமாக தரையிறங்கியது. பின்னர் காலை 8.35 மணிக்கு அவர்கள் ஜெட் ஏர்வேஸின் மற்றொரு விமானம் மூலம் கோயம்புத்தூர் சென்றனர்.