ஆஸி.-இந்திய மாணவர் எண்ணிக்கை பாதியாகும்

செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 13, 2009, 17:05 [IST]
மெல்போரன்: ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டதன் விளைவாக அடுத்த ஆண்டு அங்கு படிக்க செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிடும் என சர்வதேச கல்வி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஐடிபி என்ற கல்வி சேர்க்கை நிறுவனம் ஆஸ்திரேலியா முழுவதும் 400 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதுவரை 35 ஆயிரம் மாணவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் படிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்துள்ளது.

இந்நிறுவனத்தின் தலைமை செயலர் டோனி பொல்லாக் கூறுகையில், இந்தியாவில் இருக்கும் எங்களது அலுவலகத்தில் இந்த ஆண்டு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிடும் என நினைக்கிறோம்.
  Read:  In English 
இதற்கு ஆஸ்திரேலியாவில் தங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என அவர்கள் கருதுவது முக்கிய காரணம்.

ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இதற்கு பொருளாதார வீழ்ச்சியை காரணமாக சொல்லலாம் என்றார்.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets