லண்டன்: இணைய தள முகவரிகளில் இடம் பெறும் // (slash) இல்லாமல், அதை உருவாக்கியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் விட்டது தவறு என்பதை உணர்கிறேன். இதற்காக இணையத் தளங்களைப் பயன்படுத்துவோரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் இணையதை கண்டுபிடித்தவரான சர் டிம் பெர்னர்ஸ் லீ.
world wide web எனப்படும் இணையத் தளத்தை உருவாக்கியவர்தான் லீ. இணையத் தள முகவரிகளை அடிக்கும்போது // என இரண்டு ஸ்லாஷ்களைப் போடுவோம். ஆனால் மறதியாக ஒரு ஸ்லாஷ் மட்டும் போட்டால், இணையதளம் ஓபன் ஆகாது. மாறாக சின்டாக்ஸ் எர்ரர் என்று காட்டும். இதனால் இணையதள பயன்பாட்டாளர்கள் டென்ஷன் ஆகின்றனர்.
எதற்காக இந்த இரண்டு ஸ்லாஷை கண்டுபிடித்தார்களோ என்று அலுத்துக் கொள்கிறார்கள். இதை தற்போது லீயும் புரிந்து கொண்டுள்ளார். ஸ்லாஷ் இல்லாமலேயே யுஆர்எல்களை உருவாக்கியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தொழில்நுட்ப உலகில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள இணையத் தளம் கண்டுபிடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கழிந்த நிலையில் இவ்வாறு கூறியுள்ளார் லீ என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் கூறுகையில், 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் இணையத் தளம் குறித்த ஆய்வில் இருந்தபோது, இந்த ஸ்லாஷ், இணையத் தள பயன்பாட்டாளர்களுக்கு இவ்வளவு தொல்லை கொடுக்கும் என்பதை கற்பனை கூட செய்து பார்த்ததில்லை.
லீ, தற்போது, வேர்ல்ட் வைட் வெப் கன்சார்சிடியத்தின் இயக்குநராக இருக்கிறார். இணையத் தளங்களின் முன்னேற்றம் குறித்து கண்காணிக்கும் அமைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
world wide web எனப்படும் இணையத் தளத்தை உருவாக்கியவர்தான் லீ. இணையத் தள முகவரிகளை அடிக்கும்போது // என இரண்டு ஸ்லாஷ்களைப் போடுவோம். ஆனால் மறதியாக ஒரு ஸ்லாஷ் மட்டும் போட்டால், இணையதளம் ஓபன் ஆகாது. மாறாக சின்டாக்ஸ் எர்ரர் என்று காட்டும். இதனால் இணையதள பயன்பாட்டாளர்கள் டென்ஷன் ஆகின்றனர்.
எதற்காக இந்த இரண்டு ஸ்லாஷை கண்டுபிடித்தார்களோ என்று அலுத்துக் கொள்கிறார்கள். இதை தற்போது லீயும் புரிந்து கொண்டுள்ளார். ஸ்லாஷ் இல்லாமலேயே யுஆர்எல்களை உருவாக்கியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தொழில்நுட்ப உலகில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள இணையத் தளம் கண்டுபிடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கழிந்த நிலையில் இவ்வாறு கூறியுள்ளார் லீ என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் கூறுகையில், 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் இணையத் தளம் குறித்த ஆய்வில் இருந்தபோது, இந்த ஸ்லாஷ், இணையத் தள பயன்பாட்டாளர்களுக்கு இவ்வளவு தொல்லை கொடுக்கும் என்பதை கற்பனை கூட செய்து பார்த்ததில்லை.
Read: In English
ஒரு ஸ்லாஷ் போடாமல் விட்டால் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் இணையத் தள பயன்பாட்டாளர்களுக்கு பெரும் அவுசகரியம் ஏற்படுகிறது. இதற்காக நான் வருத்தப்படுகிறேன். ஸ்லாஷ் இல்லாமலேயே யுஆர்எல்களை நான் உருவாக்கியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் விட்டதற்காக வருத்தப்படுகிறேன், அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியுள்ளார்.லீ, தற்போது, வேர்ல்ட் வைட் வெப் கன்சார்சிடியத்தின் இயக்குநராக இருக்கிறார். இணையத் தளங்களின் முன்னேற்றம் குறித்து கண்காணிக்கும் அமைப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.