அம்பானி சகோதரர்கள் மத்தியஸ்தம் மூலமாக தீர்வு காணலாமே - சுப்ரீம் கோர்ட் யோசனை

புதன்கிழமை, அக்டோபர் 21, 2009, 10:53 [IST]
டெல்லி: கிருஷ்ணா - கோதாவரிப் படுகை இயற்கை எரிவாயு பிரச்சினை தொடர்பாக ஏன் அம்பானி சகோதரர்கள் மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண முயலக் கூடாது என்று உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் கிருஷ்ணா - கோதாவரிப் படுகையில் எடுக்கப்படும் எரிவாயுவை, மார்க்கெட் விலையைவிட குறைந்த விலைக்கு தனது ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்ஸஸ் லிமிட் நிறுவனத்துக்கு விற்க வேண்டும் என்றும், இதற்கான ஒப்பந்தம் தங்களுக்குள் 2005-க்கு முன்பே கையெழுத்தாகியுள்ளதாகவும் அனில் அம்பானி கோரி வருகிறார்.

ஆனால் 'இயற்கை எரிவாயு அரசின் சொத்து. அதை எடுத்துத் தரும் ஒப்பந்தக்காரர் மட்டுமே ரிலையன்ஸ் நிறுவனம். இதற்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம் அரசுக்கு மட்டுமே உள்ளது' என மத்திய அரசு கூறிவிட்டது. இதையே முகேஷ் அம்பானியும் கூறிவருகிறார்.

இதுதொடர்பான வழக்கு நேற்று உச்சநீதி மன்றத்தில் தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ரவீந்திரன் மற்றும் பி சதாசிவம் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

இரண்டு மணி நேரம் இந்த விசாரணை நடந்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முடிவு எதையும் சொல்லவில்லை. ரிலையன்ஸ் தரப்பு வழக்கறிஞர் இன்னும் சில கருத்துக்களைக் கூற விரும்பியதால் இன்றும் இந்த விசாரணை நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏன் அம்பானி சகோதரர்களின் ரிலையன்ஸ் இன்ஸட்ஸ்ட்ரீஸ் மற்றும் ஆர்.என்.ஆர்.எல். (ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்ஸஸ் லிமிட்) நிறுவனங்கள் ஒரு மத்தியஸ்தர் மூலமாக தங்களது பிரச்சினையை தீர்த்துக் கொள்ளக் கூடாது என்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கேள்வி விடுத்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், பேச்சுவார்த்தை அல்லது மத்தியஸ்தம் மூலமாக இரு தரப்பும் ஒரு சுமூக முடிவுக்கு வர முடியும் என்றார்.
  Read:  In English 
அதற்குப் பதிலளித்த முகேஷ் அம்பானி நிறுவன வழக்கறிஞர் கூறுகையில், அரசின் காஸ் பயன்பாடு மற்றும் விலைக் கொள்கைதான் பொருத்தமான உடன்பாடு என்று தெரிவித்தார்.

முன்னதாக நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
இந்த வழக்கு இரு தனி நபர்களுக்கிடையிலான மோதல் மட்டுமே. ஆனால், ஏதோ இரு நாடுகளுக்கிடையிலான போர் போன்ற தோற்றத்தை முகேஷ் - அனில் அம்பானிகளின் சண்டை ஏற்படுத்தியுள்ளது" என்றனர்.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets