நரேந்திர மோடிக்கு பன்றிக் காய்ச்சல்-தீவிர சிகிச்சை

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 30, 2009, 11:45 [IST]
அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது.

மோடிக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவருக்கு டமிப்ளூ மாத்திரைகள் கொடுக்கப்பட்டு சிகிச்சைகள் தொடங்கியுள்ளன.

நாடு முழுவதும் பலி 463 ஆனது:

இதற்கிடையே, பன்றிக் காய்ச்சலுக்கு நாடு முழுவதும் இதுவரை 463 பேர் பலியாகியுள்ளனர். நேற்று மட்டும் 6 பேர் உயிரிழந்தனர்.
  Read:  In English 
மகாராஷ்டிராவில் ஒருவரும், கர்நாடகாவில் ஐந்து பேரும் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 197 பேர் இறந்துள்ளனர். கர்நாடகத்தில் 117 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,722 ஆக உயர்ந்துள்ளது.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets