For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வந்தே மாதரத்துக்கு எதிர்ப்பு தேச விரோதம்-பாஜக

Google Oneindia Tamil News

Mulali Manohar Joshi
டெல்லி: வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று ஜமாயத் உலாமா இ ஹிந்த் இஸ்லாமிய அமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அக் கட்சியின் துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில்,

ஜமாயத் உலாமா இ ஹிந்த் உத்தரப் பிரதேச மாநிலம் தியோபந்தில் நடைபெற்ற தனது மாநாட்டில் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

ஆனால், அதில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அந்தத் தீர்மானத்தை கண்டிக்கவில்லை. இதன்மூலம் அந்தத் தீர்மானத்துக்கு மத்திய அரசின் ஆதரவு உள்ளது தெளிவாகிறது.

முதலில் அவர் எதற்காக அந்த மாநாட்டுக்குப் போனார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். போனவர் அந்தத் தீர்மானத்தையாவது எதிர்த்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் போனதால் நாட்டில் பிரிவினையைத் தூண்டிவிடும் தீர்மானத்துக்கு ஆதரவு தருவது போல நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது.

தலிபான் மன நிலையை வைத்துக் கொண்டு தீவிரவாதத்துக்கு எதிராக போர் தொடுத்துவட முடியாது. வந்தே மாதரம பாடுவது என்பது கட்டாயமில்லை. அவரவர் சொந்த விருப்பததைப் பொறுத்ததே. இந் நிலையில் இப்படிப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியம் எனன?.

பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தை சிதம்பரம் இப்போது மீண்டும் கிளப்ப வேண்டிய அவசியம் என்ன?.

இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

முரளி மனோகர் ஜோஷி:

மூத்த பாஜக தலைவரான முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், வந்தே மாதரத்துக்கு எதிரான இந்தத் தீர்மானம் ஏற்புடையதல்ல. இது அரசியல் சட்டத்துக்கும் விரோதமான தீர்மானம். சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்களிடையே உணர்ச்சியைப் பரப்ப உதவிய பாடல் இது என்றார்.

கல்ராஜ் மிஸ்ரா:

பாஜக தேசியச் செயலாளர் கல்ராஜ் மி்ஸ்ரா கூறுகையில், வந்தே மாதரத்துக்கு எதிரான இந்த பத்வாவை எல்லா வகையிலும் எதி்ர்போம். இது நாட்டுக்கு எதிரானது, நாட்டு ஒற்றுமைக்கு எதிரானது என்றார்.

ப.சிதம்பரம் விளக்கம்:

இந் நிலையில் அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தியோபந்த் மாநாட்டில் நான் 3ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை கலந்து கொண்டேன். அந்த நேரத்தில், வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோது, நான் மேடையில் இல்லை. வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதை மாநாட்டில் நான் பேசியபோது எனக்கு யாரும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X