பெஷாவர் குண்டுவெடிப்பில் 12 பேர் பலி

திங்கள்கிழமை, நவம்பர் 9, 2009, 11:15 [IST]
பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலியாயினர்.

தலிபானுக்கு எதிராக அமெரிக்க போர் விமானங்கள் உதவியோடு பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தி வரும் எல்லையில் அதை ஒட்டிய முக்கிய நகரான பெஷாவரில் கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

கடந்த வாரம் பெஷாவர் மார்க்கெட்டில் நடந்த மனித குண்டு தாக்குதலில் 120 பேர் பலியாயினர். நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் மேயர் உள்பட 11 பேர் பலியாயினர்.
  Read:  In English 
இந் நிலையில் நேற்றிரவு ஆட்டோவில் வந்த ஒரு நபர் பெஷாவரின் கால்நடை மார்க்கெட் அருகே தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கத் செய்ததில் 12 பேர் பலியாயினர்.

இந்தத் தாக்குதலுக்கு தெஹ்ரீ்க்-ஏ-தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets