To check Oneindia Tamil on your Mobile
go to:   http://m.oneindia.in/tamil/

ஐரோப்பிய யூனியன் தலைவரான பெல்ஜியம் பிரதமர்

Herman Van Rompuy and Catherine Ashton
பிரஸ்ஸல்ஸ்: ஐரோப்பிய யூனியன் அமைப்பின் முழு நேரத் தலைவராக பெல்ஜியம் பிரதமர் ஹெர்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெளியுறவுக் கொள்கைத் தலைவராக கேத்தரின் ஆஷடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

27 உறுப்பினர்களைக் கொண்ட யூனியன் கூட்டத்தில் ஒரு மனதாக ஹெர்மன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டிசம்பர் 1ம் தேதி தனது பொறுப்பை அவர் ஏற்கவுள்ளார்.

62 வயதாகும் ஹெரமன், இளைஞராக இருந்தது முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருபவர். இருப்பினும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் இவர் பிரதமர் பதவியை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

1988 முதல் 93 வரை கிறிஸ்தவ மக்கள் கட்சியின் தலைவராக இருந்தார். 1993 முதல் 99 வரை அமைச்சராக இருந்தார். பட்ஜெட் போடுவதில் இவர் மிகத் திறமையானவர். நிதி விவகாரங்களி்ல் நல்ல அனுபவம் கொண்டிருந்தாலும், வெளியுறவு விவகாரங்களில் இவருக்கு ஞானம் போதாது என்று கூறப்படுகிறது.

அதேபோல இங்கிலாந்து லேபர் கட்சியைச் சேர்ந்த கேத்தரின் ஆஷ்டன், வெளியுறவுக் கொள்கைப் பிரிவு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

53 வயதாகும் இவர் கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பிரபுக்கள் சபைக்கு நியமிக்கப்பட்டவர். பின்னர் இங்கிலாந்துக்கான ஐரோப்பிய ஆணையத்தின் ஐரோப்பிய கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

இங்கிலாந்தில் அதிகம் அறியப்படாத அரசியல்வாதிகளில் இவர் ஒருவர். வெளியுறவுக் கொள்கையில் பெரிய ஞானம் இல்லாதவர். அதேசமயம், வர்த்தக விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர். பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்.

இப்படி இரு முக்கியப் பதவிகளை பெற்றுள்ள இரு தலைவர்களும், வெளியுறவு விவகாரங்களில் போதிய அனுபவம் இல்லாதவர்களாக தேர்வு செய்யப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளதாம் ஐரோப்பிய நாடுகளில்.
நவம்பர் 20, 2009 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க
 
Only ODI , Sharjah Cricket Association Stadium
Pakistan won by 7 wickets
ODI, Western Australia Cricket Association Ground, Perth
Australia won by 5 runs

சிதம்பரம்-முதலையிடம் சிக்கி பெண் பலி!

சிதம்பரம்: சிதம்பரம் அருகே வாய்க்கால் ஓரம் ஆடு மேய்த்த பெண்ணை முதலை கடித்து குதறியது. இதில் அப்பெண் பரிதாபமாக இறந்தார்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை ஊராட்சி வேலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சாவித்திரி (45). இவர், மேலாறு வடிகால் வாய்க்கால் ஓரம் நேற்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.வாய்க்கால் கரையில், புல் அறுத்துக் கொண்டிருந்த போது நீரிலிருந்து திடீரென வெளியே வந்த ஒரு முதலை, சாவித்திரியை கடித்து, தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது.சாவித்திரியின் கூச்சல் சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். நீண்ட நேரம் போராடி முதலையிடம்.....

கோவா சர்வதேச இந்தியப் பட விழாவில் பசங்க

கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இடம் பெறும் 26 படங்களில் தமிழிலிருந்து பசங்க படம் இடம் பெற்றுள்ளது.கோவாவில் 40வது சர்வதேச இந்திய திரைப்பட விழா 23ம் தேதி தொடங்குகிறது.இந்தத் திரைப்பட விழாவின் தொடக்க விழாவுக்கான சிறப்பு விருந்தினராக வஹீதா ரஹ்மான் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிறைவு விழாவின் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் மம்முட்டி இடம் பெறுகிறார்.தொடக்க விழாவை கபீர் பேடியும், திவ்யா தத்தாவும் தொகுத்து அளிப்பார்கள். இந்த விழாவில் இந்தியப் பிரிவில் மொத்தம் 26 பொழுது போக்கு மற்றும் டாக்குமென்டரிப் படங்கள்.....

தென்னிந்தியாவில் டிவி 'அடிமைகள்' அதிகம்!

வட இந்தியர்களை விட தென்னிந்தியர்கள்தான் அதிக அளவில் டிவி பார்க்கின்றனராம். டிஏஎம் என்ற நிறுவனம் இதுதொடர்பான புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.இந்தியாவின் பிற பகுதி மக்களை விட தென்னிந்திய மக்கள் அரை மணி நேரம் கூடுதலாக டிவி பார்க்கின்றனராம். இது வார நாள் கணக்கு. வார இறுதி நாட்களில் ஒரு மணி நேரம் அதிகமாக பார்க்கின்றனராம்.இந்தியாவின் பிற பகுதி மக்கள் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2 மணி நேரம் 30 நிமிடங்கள் டிவி பார்க்கின்றனராம். தென்னிந்தியர்கள் 2 மணி நேரம் 50 மணி நேரம் பார்க்கின்றனர்.தமிழகத்தைப் பொறுத்தவரை.....
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
Oneindia  Oneindia Login