சிதம்பரம்-முதலையிடம் சிக்கி பெண் பலி!

வெள்ளிக்கிழமை, நவம்பர் 20, 2009, 16:03 [IST]
சிதம்பரம்: சிதம்பரம் அருகே வாய்க்கால் ஓரம் ஆடு மேய்த்த பெண்ணை முதலை கடித்து குதறியது. இதில் அப்பெண் பரிதாபமாக இறந்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை ஊராட்சி வேலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சாவித்திரி (45). இவர், மேலாறு வடிகால் வாய்க்கால் ஓரம் நேற்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

வாய்க்கால் கரையில், புல் அறுத்துக் கொண்டிருந்த போது நீரிலிருந்து திடீரென வெளியே வந்த ஒரு முதலை, சாவித்திரியை கடித்து, தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது.

சாவித்திரியின் கூச்சல் சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். நீண்ட நேரம் போராடி முதலையிடம் இருந்து சாவித்திரியை மீட்டனர். ஆனால் அதற்கும் சாவிரித்திரி பரிதாபமாக உயிரிழந்தார்.
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets