ஐபிஎன் அலுவலக தாக்குதல்-சிவசேனா எம்.பி தம்பி மீது புகார்

சனிக்கிழமை, நவம்பர் 21, 2009, 12:43 [IST]
மும்பை: மும்பை மற்றும் புனேவில் ஐபிஎன் லோக்மாத் டிவி அலுவலகங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக 23 சிவசேனா கட்சியினரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவங்களில் முளையாக செயல்பட்டது சிவசேனா எம்.பி. சஞ்சய் ராத்தின் தம்பி சுனில் ராத் எனக் கூறப்படுகிறது.

தற்போது சுனில் ராத் தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர். சமீபத்தில் நடந்த மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் பான்டுப் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் சுனில் என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக மும்பையில் 17 பேரும், புனேவில் 6 பேரும் கைதாகியுள்ளனர். மும்பையில் கைது செய்யப்பட்ட 17 பேரில் 7 பேரை ஐபிஎன் லோக்மாத் அலுவலக ஊழியர்களே பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
  Read:  In English 
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அனைத்துத் தரப்பிலும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்படுடள்ளன. ஆனால் தனது செயலை சிவசேனா நியாயப்படுத்தியுள்ளது. தங்களது தலைவர் பால் தாக்கரேவை விமர்சித்த காரணத்தால்தான் இந்த கோபத்தை சிவசேனாவினர் வெளிப்படுத்தியுள்ளதாக அது கூறியுள்ளது.

மும்பையில் உள்ள ஐபிஎன் அலுவலகங்களைத் தாக்கியதைப் போலவே சிவசேனா குண்டர் படையினர், புனேவிலும் அதன் அலுவலகத்தைத் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets