மகிந்திரா சத்யம் நிறுவன தலைமை ஆடிட்டர் கைது! சிபிஐ அதிரடி!!

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 22, 2009, 15:17 [IST]
ஹைதராபாத்: மகிந்திரா சத்யம் நிறுவனத்தின் தலைமை ஆடிட்டர் வி எஸ் பிரபாகர் குப்தாவை மத்திய குற்றப் புலனாய்வு போலீசார் - சிபிஐ- சனிக்கிழமை கைது செய்தனர்.

ராமலிங்க ராஜூவின் தலைமையில் சத்யம் இயங்கிய காலத்தில் அந்த நிறுவனத்தின் சர்வதேச ஆடிட் செல் தலைவராக இருந்தவர் பிரபாகர் குப்தா. சத்யம் நிறுவன துணைத் தலைவர்களில் இவரும் ஒருவர்.

நிறுவனம் மகிந்திரா கைக்கு மாறியும் கூட, இவர் தன் பதவியில் தொடர்ந்தார்.
  Read:  In English 
ரூ 7800 கோடி மோசடியில் ராமலிங்க ராஜூ சிறை சென்ற பிறகு, வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, இந்த மோசடியில் பிரபாகர் குப்தாவுக்கும் பங்கிருப்பதாகக் கூறி கைது செய்துள்ளது. இந்த வழக்கில் இவர் 10வது குற்றவாளி.

நவம்பர் 26-ம் தேதி வரை இவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets