For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தங்கம் விலை: சவரனுக்கு ரூ 128 குறைந்தது!

By Staff
Google Oneindia Tamil News

Gold
சென்னை: ஒரே மாதத்தில் சவரனுக்கு ரூ 1100 க்கும் மேல் விறுவிறுவென உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களாகக் குறைந்தது. நேற்று சவரன் ரூ 12944-க்கு விற்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த வியாழன் அன்று தங்கம் விலை வரலாறு காணாத விலையில் உயர்ந்து ஒரு கிராம் ரூ.1,627-க்கும், ஒரு பவுன் 13 ஆயிரத்து 16 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதாவது, ஒரு கிராம் 1618-க்கும், ஒரு பவுன் ரூ.12 ஆயிரத்து 944-க்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.72 குறைந்துள்ளது.

நேற்றும் தங்கத்தின் விலை ஓரளவு குறைந்தது. சவரனுக்கு ரூ 56 குறைந்து ரூ 12888 ஆகவும், கிராம் ரூ 1611 ஆகவும் விற்பனையாகிறது. இன்று விலையில் மாற்றமில்லை.

இந்த இரு தினங்களில் ரூ 128 குறைந்துள்ளது சவரனுக்கு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X