Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

அஸ்ஸாமில் தொடர் குண்டுவெடிப்பு - 5 பேர் பலி

Published: Sunday, November 22, 2009, 12:23 [IST]

Serial Blasts Assam S Nalbari Kill

குவஹாத்ததி: அஸ்ஸாமின் நல்பாரி மாவட்டத்தில் நடந்த 3 குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 5 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இன்று காலை இந்த சம்பவம் நடந்தது. நல்பாரி மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு வெளியே 2 குண்டுகள் வெடித்தன. 3வது குண்டு கோபால் பஜார் பகுதியில் வெடித்தது. முதல் 2 குண்டுவெடிப்பு நடந்த 5வது நிமிடத்தில் 3வது குண்டு வெடித்தது.

இந்த குண்டுகள் சைக்கிளில் கட்டி வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. கால் மணி நேரத்திற்குள் 3 குண்டுவெடிப்புச் சம்பவங்களும் நடந்துள்ளன. மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

உல்பா தீவிரவாதிகளே இதற்குக் காரணமாக இருப்பார்கள் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளில் பதட்டம் நிலவுகிறது.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 2 , Eden Gardens, Kolkata
Mumbai Indians won by 4 wickets
2nd Test , Headingley, Leeds
Play stopped for day.