அக்னி ஏவுகணை-இரவு சோதனை தோல்வி

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24, 2009, 9:30 [IST]
பாலாசூர்: அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட அக்னி-2 ஏவுகணையின் இரவு நேர சோதனை தோல்வியை சந்தித்துள்ளதாகத் தெரிகிறது.

பகல் நேரத்தில் பலமுறை சோதிக்கப்பட்ட இந்த ஏவுகணை வெற்றிகரமாக இலக்கைத் தாக்கியது. ஆனால், முதன்முறையாக இரவு நேரத்தில் நேற்று சோதனையிடப்பட்டபோது அது இலக்கை எட்டவில்லை.

இதன்மூலம் அக்னி-2 இரவு நேர சோதனை தோல்வியை சந்தித்துள்ளது.

ஒரிஸ்ஸா பாலாசூர் அருகே உள்ள வீலர்ஸ் தீவுகளில் இருந்து நேற்றிரவு 7.50 மணிக்கு இந்த ஏவுகணை ஏவப்பட்டது.

வெற்றிகரமாகக் கிளம்பிய ஏவுகணையின் முதல் ஸ்டேஜ் ராக்கெட் நன்றாக செயல்பட்டது. ஆனால், இரண்டாவது ராக்கெட் சரியாக செயல்படாததால் திசைமாறி பயணித்தது அக்னி.

இந்த மாத துவக்கத்தில் நடப்படவிருந்த இந்தச் சோதனை சில தொழில்நுட்பக் காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டு நேற்று நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  Read:  In English 
1000 கிலோ அணு ஆயுதத்துடன் 2000 கிமீக்கு அதிகமாக பயணித்து இலக்கைத் தாக்கும் ஏவுகணை அக்னி. 1999ம் ஆண்டு முதன்முதலாக சோதனையிடப்பட்டது.

இப்போது தான் முதன்முறையாக இரவில் சோதிக்கப்பட்டு தோல்வியடைந்துள்ளது.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets