உல்பா தலைவர் இந்தியாவிடம் ஒப்படைப்பு!

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 4, 2009, 12:30 [IST]
டவ்கி (மேகாலயா): வங்க தேசத்தில் கைது செய்யப்பட்ட உல்பா தலைவர் அரபிந்த ராஜ்கோவா உள்ளிட்ட 10 பேர் இன்று காலை மேகாலயா எல்லையில் வைத்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டு நேற்று வங்கதசே எல்லைப் பாதுகாப்புப் படையினரால் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வந்தன. ஆனால், இன்று காலை தான் அவர்கள் ஒப்படைக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒப்படைக்கப்பட்டவர்களில் அரபிந்தாவின் மனைவி மற்றும் 2 குழந்தைகள், உல்பாவி்ன் ராணுவத் தலைவர் ராஜூ பருவா, அவரது மனைவி, மகள், மகன் மற்றும் அரபிந்தாவின் பாடி கார்ட், உல்பாவின் வெளியுறவுச் செயலாளர் சசிதர் செளத்ரி ஆகியோரும் அடக்கம்.

மேகாலயாவின் ஜெய்னிதா மாவட்டத்தில் டவ்கி மலைப் பகுதியில் வைத்து இவர்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அனைவரும் உடனடியாக ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்திக்குக் கொண்டு வரப்பட்டனர்.

மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உல்பா முன் வந்துள்ள நிலையில் இவர்களை வங்கதேச அரசு இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தை இவர்கள் முன் வந்தததால் இவர்களை கைது செய்ய மாட்டோம் என மத்திய அரசு உத்தரவாதம் தந்தாதல் தான் வங்கதேசம் இவர்களை இந்தியாவிடம் ஒப்படைத்ததாகத் தெரிகிறது.

இந்திய உளவுப் பிரிவனர் வங்கதேசத்தில் வைத்து உல்பாவிடம் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தைகளையடுத்தே இந்த கைது, ஒப்படைப்பு விஷயங்கள் நடந்துள்ளதாகத் தெரிகிறது.

அதே நேரத்தில் உல்பாவின் உயர் மட்டத் தலைவரான பரேஷ் பருவா இந்தியாவுடன் பேச்சு நடத்த முடியாது என்றும், ஆயுதப் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளார்.
  Read:  In English 
ஆனால், அந்த இயக்கத்தின் நம்பர் டூ என்று கருதப்படும் அரபிந்த ராஜ்கோவா பேச்சுவார்த்தைக்கு முன் வந்துள்ளதால் அந்த இயகத்தி்ல் பிளவு ஏற்பட்டு்ள்ளது தெளிவாகிறது. இதன் பின்னணியிலும் இந்திய உளவுப் பிரிவுகள் இருப்பதாகத் தெரிகிறது.

பேச்சுவார்த்தைக்கு முன் வந்து வன்முறையைக் கைவிடுவதாக ராஜ்கோவா விரைவில் அறிவிப்பார் என்று தெரிகிறது. இதனால் அவரை இந்திய அரசு கைது செய்யாது என்று கூறப்படுகிறது.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets