ரஷ்ய ஹோட்டலில் பயங்கர வெடிவிபத்து-101 பேர் பலி

சனிக்கிழமை, டிசம்பர் 5, 2009, 11:03 [IST]
மாஸ்கோ: ரஷ்யாவில் ஒரு ரெஸ்டாரெண்டில் நடந்த கொண்டாட்டங்களின்போது நடத்தப்பட்ட வாண வேடிக்கை நிகழ்ச்சியில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 101க்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர்.

மாஸ்கோவுக்கு கிழக்கே 700 கி.மீ. தொலைவி்ல் உள்ள பெர்ம் நகரில் இந்த விபத்து ஏற்பட்டது.

இங்குள்ள லமே ஹார்ஸ் என்ற ஹோட்டலின் 8வது ஆண்டு விழாவையொட்டி மிகப் பெரிய பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி மிக பிரமாண்டமான வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடந்தன.

அப்போது நடந்த வெடிவிபத்தில் ஹோட்டல் வெடித்துச் சிதறி தீப் பிடித்துக் கொண்டது. இதில் அங்கிருந்த ஹோட்டல்கள் ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் வாடிக்கையாளர்கள் என 230 பேர் சிக்கிக் கொண்டனர்.

தீயில் கருகி பலரும் பலியானர். பெரும்பாலானவர்கள் புகையில் சிக்கி மூச்சுத் திணறி பலியாயினர். மொத்தத்தில் 101 பேர் வரை பலியாகியுள்ளனர்.

140 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 85 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
  Read:  In English 
இந்த சம்பவத்தில் தீவீரவாத செயல் ஏதும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் ரஷியாவில் ஓடும் ரயிலில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ரயில் கவிழ்ந்து 26 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets