For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செம்மொழி மாநாட்டுக்குப் பூங்கா - கோவை மத்திய சிறை இடம் மாறுகிறது

By Staff
Google Oneindia Tamil News

Coimbatore prison
கோவை: உல​கத் தமிழ்ச் செம்​மொழி மாநாட்டுப் பூங்கா அமைப்பதற்காக கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள நிலத்தை எடுத்துக் கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் கோவை சிறைச்சாலை நகருக்கு வெளியே கொண்டு செல்லப்படுகிறது. இத்தகவலை துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவை​யில் வரும் ஜூன் மாதம் நடை​பெ​ற​வுள்ள உல​கத் தமிழ்ச் செம்​மொழி மாநாட்​டுப் பணிகளை அவர் நேரில் பார்வையிட்டார்.

பின்​னர் கோவை ரெல்​பீல்​டில் அமைக்​கப்​பட்​டுள்ள செம்​மொழி மாநாடு சிறப்பு அலு​வ​லர் அலு​வ​ல​கத்​தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் கூறுகையில், "உல​கத் தமிழ்ச் செம்​மொழி மாநாட்​டை​யொட்டி கோவை மாந​க​ரம் மற்​றும் சுற்​றுப்​பு​றத்​தில் உள்ள நக​ராட்சி, பேரூ​ராட்சி, ஊராட்​சி​க​ளில் கட்​ட​மைப்பு வச​தி​களை மேம்​ப​டுத்​து​வ​தற்​கான நிதி தேவை குறித்து அண்​மை​யில் தலை​மைச் செய​லர் தலை​மை​யில் ஆலோ​ச​னைக் கூட்​டம் நடத்​தப்​பட்​டது.​

இதில் பெறப்​பட்ட மதிப்​பீ​டு​க​ளின் அடிப்​ப​டை​யில் ஏறத்​தாழ ரூ.300 கோடிக்கு கட்​ட​மைப்பு வச​தி​கள் கோவை​யில் மேம்​ப​டுத்​தப்​ப​டும்.​ முதல்​வ​ரின் உத்​த​ர​வைப் பெற்று இப் பணி​கள் உட​ன​டி​யா​கத் துவங்​கப்​ப​டும்.​

சிறைவளாகத்தில் செம்​மொழி மாநாட்​டுப் பூங்கா...

மாநாட்​டின் நினை​வாக கோவை மத்​திய சிறை இருக்​கும் பகு​தி​யில் தாவ​ர​வி​யல் பூங்கா அமைக்​கப்​ப​டும் என அறி​விக்​கப்​பட்​டது.​ 165 ஏக்​க​ரில் இருக்​கும் சிறை வளா​கத்​தில் 93 ஏக்​கர் காலி​யி​ட​மாக உள்​ளது.​ முதல்​கட்​ட​மாக இப் பகு​தி​யில் பூங்கா அமைப்​ப​தற்​கான பணி​கள் உட​ன​டி​யா​கத் துவங்​கப்​ப​டும்.​ அதன்​பி​றகு படிப்​ப​டி​யாக புற​ந​க​ரப் பகு​திக்கு சிறை மாற்​றப்​ப​டும்.​

சிறை அமைப்​ப​தற்கு ஏற்ற இடங்​கள் தேர்வு செய்​யப்​பட்டு ஆய்​வில் இருக்​கி​றது.​

சிறை வளா​கத்தை முழு​மை​யாக மாற்​றிய பிறகு 165 ஏக்​க​ரி​லும் தாவ​ர​வி​யல் பூங்கா அமைக்​கப்​ப​டும்.​

இப் பூங்​கா​விற்கு செம்​மொழி மாநாட்​டுப் பூங்கா எனப் பெயர் சூட்ட முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.​ பூங்கா அமைக்​கும்​போதே அருகே உள்ள காந்​தி​பு​ரம் பஸ் நிலை​ய​மும் விரி​வாக்​கம் செய்​யப்​ப​டும் என்​றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X