பிரபாகரன் மறைவிடத்தில் ராணுவ நினைவு சின்னம்

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 11, 2009, 14:12 [IST]
கொழும்பு: விடுதலைப் புலிகளி்ன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் போரில் உயிரிழந்த இலங்கை ராணுவ வீரர்களின் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

நந்திக்கடல் அருகே உள்ள புதுமத்தாளன் என் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சின்னத்தை அந் நாட்டு அதிபர் ராஜபக்சே திறந்து வைத்தார்.

முன்னதாக இப் பகுதிக்கு வந்த ராஜபக்சேவுக்கு ராணுவ அணிவகுப்புடன் மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவத்தி்ன் புதிய பிரிவான வன்னிப் பிரிவின் தலைமையகத்தையும் ராஜபக்சே திறந்து வைத்து, அதன் புதிய கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

இதையடுத்து வவுனியா செட்டிக் குளத்தில் உள்ள முகாமில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களிடையே தமிழில் அவர் பேசினார்.

அவர் கூறுகையில், வரும் ஆண்டு ஜனவரி 31ம் தேதிக்குள் அனைத்து தமிழர்களும் அவர்களுடைய சொந்த ஊர்களிலேயே குடியமர்த்தப்படுவார்கள் என்றார்.

பின்னர் மடு என்ற இடத்தில் உள்ள கத்தோலிக்க ஆலயத்துக்கும் ராஜபக்சே சென்றார்.

கிருஷ்ணா-பொகலகாமா சந்திப்பு

இந் நிலையில் போரால் இடம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் அவர்களுடைய சொந்த ஊர்களில் குடியமர்த்தும் பிரச்சனை குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித பொகலகாமாவுடன் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆலோசனை நடத்தினார்.

மியான்மர் நாட்டில் பல்துறை, தொழில்நுட்ப, பொருளாதார கூட்டமைப்புக்கான வங்காள விரிகுடா அமைப்பின் 12வது அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் நடைபெற்று வருகிறது.
  Read:  In English 
இதில் பங்கேற்க ரோகித பொகலகாமா, எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் மியானமார் சென்றுள்ளனர். அப்போது இருவரும் சந்தித்துப் பேசினர்.

அதில், இலங்கையில் போரால் இடம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் குடியமர்த்தும் பணியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets