Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஆந்திராவுக்கு 2,000 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயற்சி

Published: Friday, December 11, 2009, 15:51 [IST]

சென்னை: சென்னையி்ல் இருந்து ஆந்திராவு்க்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, ராயபுரம் உணவுப் பொருள் வழங்கல் அலுவலகத்துக்கு தகவல் வந்தது.

அதிகாரிகள் விரைந்து சென்று பார்த்தபோது, அங்கு 40 மூட்டைகளில் ரேஷன் அரிசி வைக்கப்பட்டிருந்தது. கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலில் மூட்டைகளை ஏற்றுவதற்காக சிலர் நின்று கொண்டிருந்தனர்.

அதிகாரிகளை கண்டதும், ரேஷன் அரிசி மூட்டைகளை போட்டு விட்டு அந்த கும்பல் தப்பியோடி விட்டது. அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் எடை 2,000 கிலோ.

விசாரணையில், ரேஷன் அரிசி மூட்டைகளை கும்மிடிப்பூண்டி கொண்டு போய், அங்கிருந்து ஆந்திராவுக்கு கடத்திச்செல்ல ஒரு கும்பல் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரிடம் இதுபற்றி புகார் செய்யப்பட்டது. அவர்கள் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசி கடத்திய கும்பலை தேடிவருகிறார்கள்

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Sunrisers won by 5 wickets
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 170 runs