Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

14 வயது சிறுமியை கற்பழித்த மாஜி டிஜிபிக்கு வெறும் 6 மாதம் சிறை தண்டனை!

Published: Tuesday, December 22, 2009, 14:44 [IST]

Ruchika Molestation Ex Dgp Gets

சண்டிகர்: 19 வருடங்களுக்கு முன்பு 14 வயது சிறுமியான வளரும் வீராங்கனை ருசிகா கிர்ஹோத்ராவை கற்பழித்த முன்னாள் டிஜிபிக்கு வெறும் 6 மாத சிறைத் தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்துள்ளது சண்டிகர் சிபிஐ கோர்ட்.

1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹரியானா ஐஜியாக இருந்த எஸ்.பி.எஸ். ரத்தோர் என்பவர் வளரும் இளம் விளையாட்டு வீராங்கனையான 14 வயதான ருசிகாவை தனது அலுவலக இல்லத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

அப்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த 3 ஆண்டுகள் கழித்து ருசிகா தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 19 வருடங்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரத்தோருக்கு 6 மாத சிறைத் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது சண்டிகர் சிபிஐ கோர்ட்.

கடந்த 2002ம் ஆண்டு டிஜிபியாக ஓய்வு பெற்றார் ரத்தோர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் ரத்தோர் குற்றவாளியாக நேற்று அறிவிக்கப்பட்டார். இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.

ருசிகா விவகாரத்திற்குப் பின்னர் அவரது குடும்பத்தினர் பயத்தில் ஹரியானாவை விட்டு போய் விட்டனர். இதையடுத்து ருசிகாவின் தோழியான ரீமு மற்றும் அவரது தந்தை ஆனந்த் பிரகாஷ் ஆகியோர் வழக்கை நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் ரீமு ஒரு முக்கிய சாட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
1st Preliminary Final , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST