ஜஸ்ட் டயலின் தகவல் தொகுப்பைத் திருடிய ஆஸ்க்மி.இன் தளத்திற்குத் தடை

சனிக்கிழமை, ஜனவரி 30, 2010, 14:30 [IST]
டெல்லி: தகவல் திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஆஸ்க்மி.இன் இணையதளத்தை மூடுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி தேடுதல் எந்திரத் தளமான ஜஸ்ட் டயல் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

240 நகரங்களில் 69999999 என்ற ஒரே தொலைபேசி எண்ணுடன் செயல்பட்டு வரும் முன்னணி சர்ச் என்ஜின் ஜஸ்ட் டயல். இது டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆஸ்மி.இன் தளத்தை நடத்தி வரும் டிவி18 மீடியா குழுமத்தைச் சேர்ந்த இன்போமீடியா 18 நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

அதில், இன்போமீடியா 18 நிறுவனம், எங்களது மிகப் பெரிய தகவல் களஞ்சியத்தில் இடம் பெற்றுள்ள தகவல்களை எடுத்து அப்படியே தனது ஆஸ்க்மி.இன் தளத்தில் இடம் பெற வைத்துள்ளது. இது அப்பட்டமான காப்பிரைட் விதி மீறலாகும்.

இந்த செயலால் ஜஸ்ட் டயல் இணையதளத்தின் மதிப்பு வாய்ந்த தகவல் களஞ்சியம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியிருந்தது.

இதை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ஜஸ்ட் டயலின் தகவல் தொகுப்பை பயன்படுத்த ஆஸ்க்மி. இன் தளத்துக்குத் தடை விதித்தது. மேலும், அடுத்த விசாரணை நாள் வரை ஆஸ்க்மி.இன் இணையதளத்தை நடத்தவும் தடை விதித்தது.

மேலும், டெல்லி மற்றும் மும்பையில் உள்ள இன்போமீடியா 18 நிறுவன அலுவலகங்களில் ரெய்டு நடத்தி அங்குள்ள அனைத்து கம்ப்யூட்டர்களின் சிபியூ, பிளாப்பி டிஸ்க்குகள், சிடிக்கள், பிற பதிவு பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ய கமிஷனர்களையும் நியமித்தும் கோர்ட் உத்தரவிட்டது.

இதுகுறித்து ஜஸ்ட் டயல் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், இது ஒரு வகையான சைபர் குற்றம். இந்த குற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் எங்களுக்கு முக்கிய வெற்றி கிடைத்துள்ளது.
  Read:  In English 
தகவல் திருட்டுக் குற்றம் நடந்துள்ளது என்பதற்கான பூர்வாங்கம் இருப்பதை உறுதி செய்த டெல்லி உயர்நீதிமன்ற எங்களுக்கு சார்பான தீர்ப்பை அளித்துள்ளது. இது மிகவும் அரிதான வழக்காகும்.

எங்களது பிரமாண்டமான தகவல் தொகுப்பை உருவாக்க கிட்டத்தட்ட 14 ஆண்டு காலம் நாங்கள் கடுமையாக ஆய்வு செய்து உழைத்துள்ளோம். எனவே இந்த தகவல் திருட்டை சாதாரணமாக எடுத்துக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை என்றார்.
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets