டெல்லி: மும்பை மகாராஷ்டிரர்களுக்கே என்று சிவசேனா சொல்வது அழிவுக்கே வித்திடும். மிகவும் அபாயகரமான பேச்சு இது. மும்பை அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவானது, அங்கு யாரும் சுதந்திரமாக நடமாடலாம், பணியாற்றலாம், வசிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சிவசேனாவின் கொள்கையை நாங்கள் நிராகரிக்கிறோம். மும்பை அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது. அனைத்து இந்தியர்களும் அங்கு சுதந்திரமாக வசிக்கலாம், வேலை பார்க்கலாம்.
மும்பையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய, பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றால் அவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும். இதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.
மகாராஷ்டிர அரசு பாதுகாப்பு சூழ்நிலைகளை மிகவும் திறம்பட கையாளும் நிலையில் உள்ளது. தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியும் அவர்களுக்குக் கிடைக்கும்.
மும்பை தொடர்பாக யார் பேசினாலும் அவர்கள் மீது பாய்ந்து கொண்டிருக்கிறது சிவசேனாவும், ராஜ் தாக்கரேவின் கட்சியும். இந்த நிலையில் ப.சிதம்பரம் சிவசேனாவின் கருத்தை அழிவுக்கு வித்திடும் கொள்கை என்று கடுமையாக வர்ணித்திருப்பதால் இரு சேனாக்களின் கோபமும் தமிழர்கள் மீது திரும்புமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சிவசேனாவின் கொள்கையை நாங்கள் நிராகரிக்கிறோம். மும்பை அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது. அனைத்து இந்தியர்களும் அங்கு சுதந்திரமாக வசிக்கலாம், வேலை பார்க்கலாம்.
மும்பையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய, பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றால் அவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும். இதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.
மகாராஷ்டிர அரசு பாதுகாப்பு சூழ்நிலைகளை மிகவும் திறம்பட கையாளும் நிலையில் உள்ளது. தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியும் அவர்களுக்குக் கிடைக்கும்.
Read: In English
எங்களது ஆலோசனைகள், அறிவுரைகளை மகாராஷ்டிர அரசு கேட்டால் நிச்சயம் நாங்கள் தருவோம். நிலைமையை திறம்பட அவர்களால் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை மத்திய அரசுக்கு உண்டு என்றார் ப.சிதம்பரம்.மும்பை தொடர்பாக யார் பேசினாலும் அவர்கள் மீது பாய்ந்து கொண்டிருக்கிறது சிவசேனாவும், ராஜ் தாக்கரேவின் கட்சியும். இந்த நிலையில் ப.சிதம்பரம் சிவசேனாவின் கருத்தை அழிவுக்கு வித்திடும் கொள்கை என்று கடுமையாக வர்ணித்திருப்பதால் இரு சேனாக்களின் கோபமும் தமிழர்கள் மீது திரும்புமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.