Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

டீசல் விலை உயர்வு எதிரொலி: பள்ளிக்கூட வேன் கட்டணமும் உயருகிறது

Published: Saturday, March 6, 2010, 15:45 [IST]

சென்னை பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலியாக பள்ளிக்கூட வேன்கள், பஸ்களுக்கான கட்டணத்தையும் உயர்த்தப் போகிறார்களாம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் உடனடியாக ஆட்டோக்கள், பஸ்கள், சரக்கு லாரிகளின் கட்டணம் ஏற்றப்படுவது வாடிக்கை.

அந்த வகையில் சமீபத்திய பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக சரக்கு லாரிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோக்காரர்களும் கட்டணத்தை ஏற்றி வசூலிக்க ஆரம்பித்து விட்டனர். டவுன் பஸ்களுக்கான கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை என்று தமிழக போக்குவரத்து அமைச்சர் கூறியுள்ளார். இருப்பினும் சாதாரண பேருந்துகளைக் குறைத்து விட்டு கட்டணம் அதிகம் உள்ள பேருந்துகளை அதிகரிக்க திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளிக்கூட வேன்கள், பஸ்களுக்கான கட்டணத்தையும் கூட்டப் போகிறார்களாம்.

சென்னை நகரில் வேன் மூலம் பள்ளி சென்று வரும் மாணவ-மாணவிகளிடம் மாதம் தலா ரூ. 800 முதல் ரூ. 1000 வரை வசூலிக்கப்படுகிறது. பள்ளிக்கூடம் வீட்டில் இருந்து வெகு தூரத்தில் இருப்பதாலும், பஸ்சில் சென்று வருவது சிரமம் என்பதாலும் பெரும்பாலான குழந்தைகள் வேன்களில் தான் செல்கிறார்கள்.

சில பள்ளிகளில் அந்த பள்ளிக்கு சொந்தமான வாகனங்கள் உள்ளன. இவற்றுக்கு கல்வி கட்டணத்துடன் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பெரும்பாலான பள்ளிகளுக்கு தனியார் வேன்களே மாணவ- மாணவிகளை அழைத்துச் செல்கின்றன. மாணவ- மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த வேன்களில் 25 குழந்தைகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என்று தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.

தற்போது டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.76 உயர்த்தப்பட்டுள்ளது. எனவே வேன்களின் வாடகை கட்டணமும் உயர்த்தப்படுகிறது. இதனால் ஒரு குழந்தைக்கு மாத கட்டணம் ரூ. 100 வரை உயரும்.

கட்டண உயர்வு குறித்து வேன் உரிமையாளர் ஒருவர் கூறுகையில்,

டீசல் விலை உயர்வால் பள்ளி வேன் ஒன்றுக்கு மாதம் ரூ. 2 ஆயிரத்து 500 முதல் கூடுதல் செலவு ஆகிறது. எனவே ஒரு குழந்தைக்கு ரூ.100 வரை கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.

பள்ளி வேன்களின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து வேன் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் நாளை சென்னையில் நடக்கிறது. இதில் பள்ளி வேன் கட்டண உயர்வு குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார்.

இந்த கட்டண உயர்வால் பெற்றோர்கள்தான் பெரும்பாடு படப் போகிறார்கள்.

கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Qualifier 1 , Feroz Shah Kotla, Delhi
Chennai Super Kings won by 48 runs
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST