மும்பை: மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்திற்குத் தொடர்பு உள்ளது. அந்த நாட்டு ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக உள்ள ஒருவர்தான் இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதை நேரடியாக கண்காணித்து அறிவுரைகளை வழங்கினார் என்று மும்பை தனி கோர்ட்டில் அரசு சிறப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் பரபரப்புத் தகவலை வெளியிட்டார்.
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள லஷ்கர் இ தொய்பா முகாம்களுக்கு நேரடியாகப் போய் இவர் கண்காணித்ததாகவும் நிகாம் தெரிவித்தார்.
மும்பை வழக்கில் தனது இறுதி வாதத்தை இன்று தொடங்கினார் நிகாம். அப்போது அவர் கூறுகையில், மும்பையில் தாக்குதலில் ஈடுபட்டு உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசால், கொல்லப்பட்ட பிற 9 தீவிரவாதிகளும், லஷ்கர் இ தொய்பாவின் சார்பாக பயிற்சியில் அமர்த்தப்பட்டனர்.
இவர்களுக்கு ராணுவப் பயிற்சியும், உளவுப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்புகளை பாகிஸ்தான் ராணுவத்தின் சில அதிகாரிகள் நேரடியாக கண்காணித்து உதவிகள் செய்தனர். அவர்களில் மேஜர் ஜெனரல் ஒருவரும் அடக்கம்.
பாகிஸ்தான் மண்ணில்தான் தாக்குதல் சதித் திட்டம் தீட்டப்பட்டது. இது பாகிஸ்தான் ஆதரவுடன் நடந்த தீவிரவாத செயல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அந்த அதிகாரியின் பெயரை தீவிரவாதிகளுக்கு லஷ்கர் இயக்கத்தினர் வேண்டும் என்றே தெரிவிக்கவில்லை. காரணம், அவர் ராணுவத்தில் மிக மிக உயரிய பொறுப்பில் இருப்பவர் என்பதால் என்றார் நிகாம்.
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள லஷ்கர் இ தொய்பா முகாம்களுக்கு நேரடியாகப் போய் இவர் கண்காணித்ததாகவும் நிகாம் தெரிவித்தார்.
மும்பை வழக்கில் தனது இறுதி வாதத்தை இன்று தொடங்கினார் நிகாம். அப்போது அவர் கூறுகையில், மும்பையில் தாக்குதலில் ஈடுபட்டு உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசால், கொல்லப்பட்ட பிற 9 தீவிரவாதிகளும், லஷ்கர் இ தொய்பாவின் சார்பாக பயிற்சியில் அமர்த்தப்பட்டனர்.
இவர்களுக்கு ராணுவப் பயிற்சியும், உளவுப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்புகளை பாகிஸ்தான் ராணுவத்தின் சில அதிகாரிகள் நேரடியாக கண்காணித்து உதவிகள் செய்தனர். அவர்களில் மேஜர் ஜெனரல் ஒருவரும் அடக்கம்.
பாகிஸ்தான் மண்ணில்தான் தாக்குதல் சதித் திட்டம் தீட்டப்பட்டது. இது பாகிஸ்தான் ஆதரவுடன் நடந்த தீவிரவாத செயல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Read: In English
கசாப் கொடுத்த வாக்குமூலத்தில், பாகிஸ்தான் மேஜனர் ஜெனரல் ஒருவர் பயிற்சியின்போது கூட இருந்தார் என்றும் பயிற்சியை மேற்பார்வையிட்டார் என்றும் கூறியுள்ளான்.அந்த அதிகாரியின் பெயரை தீவிரவாதிகளுக்கு லஷ்கர் இயக்கத்தினர் வேண்டும் என்றே தெரிவிக்கவில்லை. காரணம், அவர் ராணுவத்தில் மிக மிக உயரிய பொறுப்பில் இருப்பவர் என்பதால் என்றார் நிகாம்.