சென்னை: குடிசைப் பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றுவதைக் கண்டித்து தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் சீமான், திருமாவளவன் உள்ளிட்டோர் நடத்தவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை தடை விதித்துள்ளது.
மயிலாப்பூர் அம்பேத்கார் பாலம் அருகே நேற்று குடிசைப் பகுதியில் இருக்கும் மக்களை வெளியேற்றுவதை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழர் எழுச்சி இயக்கம் அறிவித்து இருந்தது.
இந்த உண்ணாவிரதத்தில் திருமாவளவன், இயக்குநர் சீமான் ஆகியோர் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி தரவில்லை.
இருப்பினும் தடையை மீறி தமிழர் எழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் வேலுமணி தலைமையில் அந்த இயக்கத்தினர் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.
இதையடுத்து 30 பேரை போலீஸார் கைது செய்தனர்.










