கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ்- சுப்ரீம் கோர்ட் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம்

வியாழக்கிழமை, மார்ச் 25, 2010, 12:48 [IST]
ஹைதராபாத்: கல்யாணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்வதும், ஆணும், பெண்ணும் கல்யாணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதும் குற்றச் செயல் அல்ல என்று உச்சநீதிமன்றம் கருத்து கூறியிருப்பது இந்திய கலாச்சாரத்தை சீரழித்து விடும் என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆந்திர மாநிலம், ஏழூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு பற்றிய வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறிய கருத்து ஏற்கத்தக்கதல்ல. இது இளம் தலைமுறை கெட்டுப் போகவே வழி வகுக்கும்.

இந்திய கலாச்சாரத்திற்கும் மேற்கத்திய கலாச்சாரத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. நாம் ஒருபோதும் மேற்கத்திய கலாச்சாரம் இங்கு பரவ அனுமதிக்கக் கூடாது.

திருமணத்திற்கு முன்பே ஆண்-பெண் சேர்ந்து வாழ்வது சட்டப்படி தவறு இல்லை என்றாலும் இந்திய கலாச்சாரம்-இந்து தர்மப்படி முற்றிலும் தவறானது.

திருமணத்திற்கு முன்பு உறவு பற்றி சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். இந்திய கலாச் சாரத்தை காக்க பா.ஜனதா தொடர்ந்து பாடுபடும். அதை காக்க வேண்டிய பொறுப்பு அனைத்து இந்தியர்களுக்கும் உள்ளது என்றார் நாயுடு.
User Comments
சினிமாகாரன் 22 Aug 2010 10:39 pm
குஷ்பு ஒரு நல்ல கமெண்ட் சொன்னாழ் அவ ஒரு செம.....
Tamilan 31 Mar 2010 04:06 pm
If people can live together without marrying, there cannot be any arrest on prostitution. Based on this Bhuvaneswai should be released and compensated!!!!!
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST