For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அயர்லாந்திலேயே மிகப் பெரிய பணக்காரர் ஒரு இந்தியர்!

By Staff
Google Oneindia Tamil News

Pallonji Mistry
லண்டன்: அயர்லாந்திலேயே மிகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலோன்ஜி மிஸ்திரி என்பவர் பெற்றுள்ளார்.

இவரது சொத்து மதிப்பு 3.0 பில்லியன் பவுண்டுகள் ஆகும். மிஸ்திரியின் மனைவி அயர்லாந்தைச் சேர்ந்தவர் ஆவார். இதையடுத்து கடந்த 2003ம் மிஸ்திரிக்கும் அயர்லாந்து குடியுரிமை கிடைத்தது.

அங்கு ரியல் எஸ்டேட், கார் விற்பனை, கனரகத் தொழில்துறை, தேயிலை ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ளார். அயர்லாந்தில் உள்ள தாஜ் மஹால் ஹோட்டலின் ஒரு பகுதி
பங்குகளையும் வைத்துள்ளார்.

மிஸ்திரிக்கு 70 வயதாகிறது. இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தில் இவருக்கு 18.4 சதவீத பங்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X