இன்போஸிஸ் – 4ம் காலாண்டு லாபம் ரூ. 1163 கோடி

செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 13, 2010, 12:49 [IST]
மும்பை: நான்காம் காலாண்டில் லாபமாக ரூ 1613 கோடியை ஈட்டியுள்ளது ஐடி துறையில் முன்னிலை வகிக்கும் இன்போஸிஸ் நிறுவனம்.

மார்ச் 31 அன்று முடிவடைந்த கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டு லாபத்தை இன்று மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ளது இன்போஸிஸ்.

அதில் 2008-2009 நிதியாண்டில் ரூ 1613 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாப்ட்வேர் தொடர்பான பணிகள் மூலம் மட்டும் ரூ 5944 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டு ரூ 5635 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் ரொக்கம் மற்றும் ரொக்கத்துக்கு சமமான நீர்ம இருப்பு அளவு 3.5 பில்லியன் டாலர்கள்.

"மிகச் சவாலான ஒரு நிதியாண்டில் இன்போஸிஸ் தனது வர்த்தகம் மற்றும் வருவாய் அளவை அப்படியே தக்கவைத்துக் கொண்டுள்ளது. குறிப்பாக நாணய மதிப்புகள் நிலையற்றதாக இருந்த காலகட்டத்தில் இது பெரிய சாதனையாகும்" என்கிறார் இன்போஸிஸ் சிஇஓ கோபாலகிருஷ்ணன்.
  Read:  In English 
கடந்த நிதியாண்டில் மட்டும் இன்போஸிஸின் மொத்த லாபம் ரூ 6266 கோடி. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 4.64 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நான்காம் காலாண்டில் மட்டுமே, கோல்ட்மேன் சாஷ், பிடி குழுமம் உள்ளிட்ட 47 புதிய வாடிக்கையாளர்களை இன்போஸிஸ் பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து பங்கு ஒன்றுக்கு ரூ 15 வீதம் டிவிடெண்ட் அறிவித்துள்ளது இந்நிறுவனம்.

Posted by:
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Kolkata Knight Riders won by 18 runs