For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமேஸ்வரம் கோவில் வடக்குக் கோபுர கட்டுமானப் பணி தொடக்கம்

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் வடக்குக் கோபுர கட்டுமானப் பணி கிட்டத்தட்ட 350 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடங்கியுள்ளது.

ரூ. 1.80 கோடி மதிப்பில் இந்த கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

புண்ணியஸ்தலமாக விளங்கும் ராமநாதசுவாமி திருக்கோயில் 11-ம் நூற்றாண்டில் உருவானது. இக்கோயில் ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்டு, 17-ம் நூற்றாண்டில் காரைக்குடி நகரத்தார்கள் கோயில் பிரகாரங்களை கட்டி சிறப்பிக்கச் செய்தனர்.

உலக பிரசித்திப் பெற்ற இக்கோயிலில் வடக்கு, தெற்கு ராஜகோபுரம் அடித்தளம் அமைந்த நிலையில் சுமார் 350 ஆண்டுகளாக மொட்டை கோபுரமாக இருந்தது. இந்த இருகோபுரங்களையும் ரூ. 5 கோடியில் செலவில் கட்டித் தருவதாக காஞ்சி சங்கராச்சாரியார் தெரிவித்து, 2001-ம் ஆண்டில் பூமி பூஜையுடன் கட்டுமானப் பணி துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X