ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணை-லலித் மோடி ஆப்சென்ட்

செவ்வாய்க்கிழமை, ஜூலை 27, 2010, 17:06 [IST]
டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணைக்கு லலித் மோடி இன்று ஆஜராகவில்லை. அவரது சார்பில் வக்கீல் மட்டுமே வந்தார்.

ஐபிஎல் முறைகேடுகளைத் தொடர்ந்து லலித் மோடி, அதன் ஆணையர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அவர் மீதான புகார்களை விசாரிக்க ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை கிரிக்கெட் வாரியம் நியமித்தது.

இதில், ஐபிஎல்லின் தற்போதைய தலைவர் சிரயூ அமின், கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் அருண்ஜேட்லி, மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த ஒழுங்கு நடவடிக்கை குழுவின் விசாரணை நியாயமானதாக இருக்காது என்று கோரி அதை எதிரித்து லலித்மோடி பம்பாய் உயர்நீதிமன்றத்தில், மனுத் தாக்கல் செய்தார். ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து கடந்த 16ம்தேதி நடந்த விசாரணைக் கூட்டத்திற்கு மோடி வரவில்லை. அவரது வக்கீல்தான் வந்தார். இன்றும் விசாரணைக் குழு கூடியது. இன்றும் மோடி வரவில்லை. அவரது வக்கீல்தான் வந்தார்.
Posted by:
User Comments
[ கருத்தை எழுதுங்கள் ]
இந்த கட்டுரைக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே !
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST