கொல்லம்: கேரள முதல்வர் அச்சுதானந்தன் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு வாலிபர் ஒருவர் கத்தியுடன் வந்ததைத் தொடர்ந்து முதல்வருக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேரள முதல்வர் அச்சுதானந்தன் கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது வாலிபர் ஒருவர் கத்தியுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் அச்சுதானந்தனுக்கு இமெயில் மூலமாகவும், டெலிபோன் மூலமாகவும் தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டு இருப்பதால் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.
இதுவரை டிஎஸ்பி தலைமையி்ல் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இனிமேல் எஸ்பி தலைமையில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.