வறுமைக் கோட்டுக்கு மேல்உள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கூடாது-சுப்ரீம் கோர்ட் யோசனை

புதன்கிழமை, ஜூலை 28, 2010, 12:42 [IST]
டெல்லி: வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

பொது வினியோக திட்டத்தில் ஏராளமான ஊழல் நடைபெறுவதாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில்,, ரேஷன் கடைகளில் வறுமை கோட்டுக்கு மேல் வாழும் குடும்பங்களுக்கு மானிய விலையில் தானியங்கள் வழங்குவதை கைவிடுவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

அப்படி கைவிட்டால், வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கு நிறைய தானியங்கள் கிடைக்கும். தானிய கிடங்குகளில் அழுகி வீணாகும் தானியங்களை, பட்டினியால் வாடும் ஏழைகளுக்கு வினியோகிக்க வேண்டும்.

இந்த யோசனை குறித்து 6 வாரங்களுக்குள் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் பராசரனை பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Posted by:
User Comments
தூரன் 30 Jul 2010 07:04 am
இந்தியாவில் யார் உண்மை பேசுகிறார்கள் ?நான் உட்பட .எப்படி கண்டு பிடிப்பிர்கள் ?யார் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்று?
சரிங்கோ 28 Jul 2010 03:58 pm
எம் எல் ஏ ,எம் பிக்கு இலவசங்களை கட் பண்ணி தேவைபடதவங்களுக்கு டி வி யையும் நிறுத்தி சைக்கிள் இலவசமா கொடுத்தா உடம்பு குறையும். காஸ் இருந்த மண் எண்ணெய் கிடையாது.அப்படியே கோடிகளுக்கு அதிபதி எம் எல் ஏ எம் பி களுக்கு எதுக்கு பெட்ரோல் கோட்ட பெட்ரோல் பலக் காஸ் இணைப்பு.?அவன்என்ன சாபடுக்கு வழியில்லாதவன?
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST