சென்னை: தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் மகள் மாலா ஜெயராமையா வெளிநாட்டில் மரணமடைந்தார். இதையடுத்து முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், சிவந்தி ஆதித்தன் மகள் மாலா ஜெயராமையா வெளிநாடு சென்ற இடத்தில் இயற்கை எய்திய செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.
இந்த இழப்பு தினத்தந்தி நாளிதழ், மற்றும் நண்பர் சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
மிகுந்த துன்பமும், துயரமும் அடைந்துள்ள நண்பர் சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.