சென்னை: ஆண்டிப்பட்டி பகுதியில் மு.க.அழகிரி தலைமையில் நடந்த விழாவில் ஏழை, எளியோருக்குத் தருகிறோம் என்பதற்காக லாரியில் கொண்டு வரப்பட்ட 9240 ஹார்லிக்ஸ் பாட்டில்களை திருடியுள்ளனர். இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
அரியானாவில் இருந்து சோழவந்தான் அருகே திருவாலயநல்லூருக்கு 12.7.2010-ல் லாரியில் கொண்டுவரப்பட்ட 9240 ஹார்லிக்ஸ் பாட்டில்கள் திருட்டு போனது. இதுதொடர்பான புகாரை சோழவந்தான் காவல் ஆய்வாளர் ஏற்கவில்லை.
நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகு புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் இந்த வழக்கை விசாரித்து 2 மாதங்களில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆணையிடப்பட்டுள்ளது.
முதலில் இந்த புகாரை காவல் ஆய்வாளர் வாங்க மறுத்ததன் பின்னணி என்ன?
எனது ஆண்டிபட்டி தொகுதியில் கடமலைக்குண்டு பகுதியில் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு 18.7.2010-ல் 8700 பேருக்கு உதவிகளை மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் 8700 பேருக்கு ஹார்லிக்ஸ் பாட்டில்களை அழகிரி வழங்கியிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியையும், சோழவந்தான் காவல் ஆய்வாளர் புகார் வாங்க மறுத்ததையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அழகிரி பெயரில் ஆண்டிபட்டி தொகுதி மக்களுக்கு சந்தேகம் எழுகிறது.
எனவே இதை மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க உத்தரவிடுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.