நெல்லை: ஆலடி அருணா கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள வடக்கன்குளம் கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.ஏ. ராஜாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
ஏற்கனவே இருத நோயால் பாதிக்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் 8 வாரங்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. சிகிச்சை முடிந்ததை அடுத்து அவர் மீண்டும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் நேற்று தனக்கு மீண்டும் நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதனால் போலீசார் அவரை நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் அவரை அங்கு அனுமதிக்காமல் மீண்டும் சிறைக்கே அழைத்து சென்றனர்.