விலைவாசி உயர்வு-10 கோடி பேரிடம் பெறப்பட்ட கையெழுத்துக்கள் பிரதீபாவிடம் ஒப்படைப்பு

வியாழக்கிழமை, ஜூலை 29, 2010, 14:57 [IST]
டெல்லி: விலைவாசி உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து 10 கோடி பேர் கையெழுத்திட்ட மனுவை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் பாஜக தலைவர்கள் இன்று ஒப்படைத்தனர்.

விலைவாசி உயர்வுப் பிரச்சினை காரணமாக கடந்த 3 நாட்களாக நாடாளுமன்றம் செயலிழந்து கிடக்கிறது. ஒரு அலுவலும் நடைபெறவில்லை. 3வது நாளான இன்றும் நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை பாஜக தலைவர்கள் இன்று நேரில் சந்தித்தனர். அவரிடம் தாங்கள் நடத்தி வந்த கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு கையெழுத்துப் போட்ட 10 கோடி பேரின் கையெழுத்துகள் அடங்கிய மனுவையும் ஒப்படைத்தனர்.
Posted by:
User Comments
Gans Sounth 31 Jul 2010 05:28 pm
Good effort from BJP
nallavan 29 Jul 2010 06:53 pm
ethu suitha west
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST