வேலூர் சிறையில் சீமானுடன் நடராஜன், கொளத்தூர் மணி ஆலோசனை

வியாழக்கிழமை, ஜூலை 29, 2010, 14:11 [IST]
வேலூர்: தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமானை, சசிகலாவின் கணவர் நடராஜன், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இன்று காலை இவர்கள் இருவர் மற்றும் நாம் தமிழர் அமைப்பைச் சேர்ந்த திருச்சி வேலுச்சாமி ஆகியோர் வேலூர் சிறைக்குச் சென்றனர். அங்கு சீமானை சந்தித்து முக்கால் மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பின்போது பேசப்பட்டது குறித்து நடராஜன் உள்ளிட்டோர் கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும் தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால் அரசு தன்னை வேண்டும் என்றே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளதாக சீமான் கூறியதாக தெரிகிறது.
Posted by:
User Comments
வீர தமிழன் 30 Jul 2010 06:35 am
தமிழ் நாட்டு அரசியல்ல எதிர்க்கட்சி பழைய அமைச்சர்ந்க, MLA ங்க எல்லாம் தி மு க வுக்கு ஜால்ராவா மாறுகிறபோது மத்திய, மாநில ஆளும் கட்சிகளின் துரோகத்தை தட்டி கேக்கும் தைரியம் சீமானுக்கு தவிர வேற யாருக்காச்சும் உண்டாடா? நம்ப யாருக்கும் சீமானை விமர்சிக்க தகுதியில்லை.
தமிழனடா தமிழன் 30 Jul 2010 12:08 am
ஈழத்தமிழரான பரமேஸ்வரன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் போது லண்டனில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் உண்மையானதே (அதாவது.. உண்ணா நோன்பின் போது உணவருந்தினார் என்பது பொய்யான குற்றச்சாட்டு) என்று பிரித்தானிய நீதித்துறை தீர்ப்பு வழங்கியுள்ளதுடன் அவரின் உண்ணாவிரதத்தை கொச்சைப்படுத்திய இரண்டு பிரதான பிரித்தானிய பத்திரிகைகளும் மன்னிப்புக் கோரியதுடன் நட்ட ஈட்டையும் செலுத்த உள்ளன.
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST