வேலை நிறுத்தத்தை கைவிட லாரி உரிமையாளர்களுக்கு அமைச்சர் கமல் நாத் வேண்டுகோள்

வியாழக்கிழமை, ஜூலை 29, 2010, 17:43 [IST]
டெல்லி: நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டாம் என்று மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கமல் நாத் லாரி உரிமையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த செவ்வாய் கிழமை அன்று லாரி உரிமையாளர்கள் சுங்க வரிக் கொள்கையை எதிர்த்து கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து இன்று கமல்நாத் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

சுங்க வரியை குறைக்கவில்லை என்றால் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் சுமார் 62 லடசம் லாரிகள் கால வரையின்றி ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சங்கமும், அனைத்து இந்திய மோட்டார் காங்கிரசும் அறிவித்திருந்தனர்.

இதுகுறித்து கமல்நாத் கூறுகையில், நாங்கள் லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இன்று கூட பேசினோம். மக்களை பாதிக்கும் அந்த முடிவை அவர்கள் எடுக்கமாட்டார்கள் என்று நம்புகிறோம் என்றார்.
Posted by:
User Comments
தூரன் 30 Jul 2010 07:13 am
டிசெல் விலை குறைப்பு இல்லை.ஆனால் எம். பி.க்கு ரூ .81000 சம்பளம் கொடுக்க பரிந்துரை.எங்காவது இந்த கொடுமை நடக்குமா? எம்.பிகலீல் பாதிக்குமேல் கோடிஸ்வரர்கல். இந்திய மக்களை போல் இளிச்ச வாயன் யாரும் இல்லை.
ராஜ் 29 Jul 2010 11:41 pm
கண்ட பரதேசிகள் ,முண்டங்கள் ,தண்டங்கள் அமைச்சர்கள் ஆனால் நாட்டில் அரசாங்கம் என்று ஒன்று இருக்குமா ? டோல்கேட்டில் பணம் கட்டி எந்த பரதேசி அமைச்சராவது பயணம் செய்திருக்கிறானா ? இல்லையே ;;கோவையிலிருந்து சென்னை செல்வதற்குள் நூற்று ஐம்பது வரை தெண்டம் கட்டவேண்டும் .ஐந்தாறு டோல்கேட்டுகள் ;;லாரிக்காரர்கள் போராட்டத்தின் மூலம் காங்கிரஸ் பரதேசிகள் பாடம் கற்க வேண்டும் ..ஒட்டு கேட்க வரும்போது இந்தநாய்களை அடித்து துரத்த வேண்டும்
[ கருத்தை எழுதுங்கள் ]
1st Preliminary Final , Subrata Roy Sahara Stadium, Gahunje
Match starts at 08:00 pm IST