இஸ்லாமாபாத்: பெஷாவரில் அமெரி்க்கத் துணைத் தூதரகம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.
இன்று அதிகாலை தூதரகத்தை சூழ்ந்த தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டனர். இதையடுத்து விரைந்து வந்த ராணுவத்தினரும் போலீசாரும் தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
தூதரகத்தின் அருகே உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் உளவுப் பிரிவு அலுவலகத்தையும் தீவிரவாதிகள் தாக்கினர்.


















