For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிசம்பருக்குள் 3 ஜி சேவையைத் துவக்குகிறது ஏர்டெல்!

By Chakra
Google Oneindia Tamil News

Airtel
மும்பை: வரும் டிசம்பருக்குள் 3 ஜி சேவை துவங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த 3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலத்தில் 13 தொடலைத் தொடர்பு வட்டங்களுக்கான 3 ஜி உரிமத்தை வென்றது ஏர்டெல்.

இந்த வட்டங்களில் உடனடியாக 3 ஜி சேவையை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக உள்ளது இந்நிறுவனம். அதே நேரம், உரிமம் பெறாத மற்ற வட்டங்களில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 3 ஜி ரோமிங் வசதியை வழங்கும் பொருட்டு, உரிமம் பெற்றுள்ள மற்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதில் உடன்பாடு எட்டப்பட்ட கையோடு, வரும் டிசம்பருக்குள் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் 3 ஜி சேவையை ஆரம்பிக்க உள்ளதாக பார்தி ஏர்டெல் அறிவித்துள்ளது.

எரிக்ஸன், நோக்கியா மற்றும் சீனாவின் ஹூவே நிறுவனங்களுடன் 14 Mbit/s அளவுக்கு தகவல்களை டவுன்லோட் செய்யும் High Speed Packet Access (HSPA) சேவையை அளிக்க ஏற்கெனவே வேலைகளை ஆரம்பித்துள்ளது பார்தி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X