For Daily Alerts
Just In
யாருடன் கூட்டணி வைத்தாலும் 40 தொகுதிகள் கேட்போம்-டாக்டர் ராமதாஸ்
திண்டிவனம் அருகே உள்ள டாக்டர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் பாமக பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்,
நாம் யாருடன் கூட்டணி வைத்தாலும் 40 தொகுதிகள் கேட்போம். நாம் நிச்சயம் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இதற்காக நீங்கள் இப்போதிருந்தே கடுமையாக உழைக்க வேண்டும்
தேர்தலில் கூட்டணி வைத்துக்கொள்ள தி.மு.க., அ.தி.மு.க., நம்மை அழைக்கின்றன. 50 சட்டசபை தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து அந்த தொகுதிகளில் நாம் தனித்து நின்றாலும் வெற்றி பெறும் வகையில், கட்சியைப் பலப்படுத்த வேண்டும்.
கட்சி நிர்வாகிகள் கிராமம், கிராமமாகச் சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என்றார் ராமதாஸ்.
தமிழக சட்டசபைத் தேர்தல் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் pmk founder drramadoss tamilnadu assembly election
Story first published: Tuesday, October 26, 2010, 13:51 [IST]