For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி. கிராமத்தில் ஆங்கிலத்திற்குக் கோவில்-தலித்கள் ஆங்கிலம் கற்பதற்காகவாம்!

Google Oneindia Tamil News

லக்னோ: உ.பி. மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் ஆங்கிலத்திற்குக் கோவில் கட்டி வைத்துள்ளனர். தலித் மக்களிடையே ஆங்கில அறிவை வளர்ப்பதற்காக இந்தக் கோவில் கட்டப்பட்டுள்ளதாம்.

குஷ்புவுக்குக் கோவில் கட்டிய நாடு இது. அந்த வகையில் தற்போது ஆங்கிலத்திற்கும் கோவில் கட்டி விட்டனர். அதுவும் இந்தி பெல்ட்டான உ.பி. மாநிலத்தில்தான் இந்த ஆச்சரியம்.

லகிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள பங்கா என்ற குக்கிராமத்தில்தான் இந்தக் கூத்து. ஒற்றைக் கல் சுவருடன் கூடிய கருங்கல்லால் கட்டப்பட்ட கோவில் இது. இந்தக் கோவிலுக்குள் தலித் கடவுள் இங்கிலீஷ் என்ற சிலையை நிறுவியுள்ளனர்.

மூன்று அடி சிலையாகும் இது. ஒரு பெண்ணின் உருவத்தில் இங்கிலீ்ஷ் தேவதை உள்ளது. வலது கையில் பெரிய பேனாவை ஓங்கிப் பிடித்தபடியும், இது கையில் இந்தியாவின் அரசியல் சாசன புத்தகத்தை அமைத்தபடியும், தலையில் தொப்பியும் அணிந்து சிலை காணப்படுகிறது. கீழே கம்ப்யூட்டர், கீபோர்டுடன் உள்ளது. கம்ப்யூட்டர் திரையில், அசோக சக்கரம் காணப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு நபர்களிடம் பெற்ற நிதியை வைத்து இந்தக் கோவிலை கட்ட ஆரம்பித்தனர். அக்டோபர் 25ம் தேதி இந்தக் கோவிலைத் திறக்கத் திட்டமிட்டிருந்தனர். அன்றுதான் மெக்காலேவின் பிறந்த நாளாகும். மெக்காலே, தலித் மக்களை உயர்த்தப் பாடுபட்டார், அவர்களுக்கு கல்வியறிவை புகட்ட கடுமையாக உழைத்தார் என்பது இப்பகுதி தலித் மக்களின் கருத்தாகும்.

ஆனால் தற்போது சில பிரச்சினைகளால் நவம்பர் மாதத்திற்கு கோவில் திறப்பைத தள்ளி வைத்துள்ளனர். இந்தக் கோவில் உருவாக மூல காரணமாகஇரந்தவர் சந்திர பான் பிரசாத் என்பவராவார்.

அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை, புத்த மத அடையாளங்களில் ஒன்றான தர்மசக்கரம் ஆகியவற்றை முன்மாதிரியாகக் கொண்டு இந்த சிலையை வடிவமைத்தனராம்.

இதுகுறித்து பிரசாத் கூறுகையில், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் தேசிய மொழியாக எதை அறிவிப்பது என்ற விவாதம் வந்தது. அப்போது டாக்டர் அம்பேத்கர் கூறுகையில், ஆங்கிலத்தையே தேசிய மொழியாக்க வேண்டும் என்றார். ஆனால் அதை அனைவருமே எதிர்த்தனர்.

அதன் விளைவு, இன்று மொழி அடிப்படையில் நாடு சிதறுண்டு கிடக்கிறது. ஆங்கிலத்தால்தான் நமது சமூகங்களை இணைக்க முடியும் என்பதை அன்றே உணர்ந்தவர் அம்பேத்கர். ஆனால் அவர் சொன்னதை யாரும் கேட்கவில்லை. இதனால்தான் பல்வேறு பாகுபாடுகள், பிரச்சினைகள் உருவாகக் காரணமாயிற்று.

இன்று ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டுமே உயர முடிகிறது. தெரியாதவர்கள் கிணற்றுத் தவளைகள் போல இருக்கும் நிலை உள்ளது.

தலித் மக்கள் ஆங்கிலஅறிவு பெற்றால்தான் உயர்வை அடைய முடியும். எனவேதான் தலித் மக்களிடையே ஆங்கில விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக இந்தக் கோவிலை கட்டத் தீர்மானித்தோம். இக்கிராமத்திலும் அக்கம் பக்கத்திலும் தலித் மக்கள் அதிகம் உள்ளனர். இந்தக் கோவில் மூலம் அவர்களிடையே ஆங்கில மோகம் பரவும் என கருதுகிறோம்.

ஆங்கிலத்தைக் கற்பதில் அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கிறோம். ஆங்கிலம் தெரியாவிட்டால், ஆங்கில அறிவு இல்லாவிட்டால், எதிர்காலத்தில் நல்ல வேலை கிடைக்காது என்பதை அவர்கள் ஏற்கனவே உணர்ந்துள்ளனர்.

எதிர்காலத்தில் இந்தக் கோவிலை மையமாக வைத்து பல்வேறு வைபவங்களை தலித் மக்கள் செய்யக் கூடிய நிலை ஏற்படும். இங்கு பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பது, கல்யாணம் செய்வது போன்றவற்றையும் நடத்தவுள்ளோம்.

தலித் மக்களால் இயக்கப்படும் நாலந்தா பொது சுகாதார அமைப்புக்குச் சொந்தமான இடத்தில்தான் கோவில் கட்டியுள்ளோம். ஒரு அறக்கட்டளையை ஆரம்பித்து அதன் மூலம் கோவிலை நடத்தவுள்ளோம்.

கோவிலுக்கு நவீனத்துவத்தைக் கொடுக்கும் நோக்கில், இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் ஆகியவற்றில் உள்ள எழுத்து்கள், அடையாளங்கள், பார்முலாக்கள் ஆகியவற்றை கோவில் சுவர்களில் சிற்பங்களாப் பொறித்துள்ளோம்.

அதேபோல கோவில் படிக்கட்டுக்களை கம்ப்யூட்டர் கீபோர்டு வடிவில் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இக்கோவிலுக்காக உள்ளூர் மக்கள் சேர்ந்து ஒரு பாடலை இயற்றிக் கொடுத்துள்ளனர். அந்தப் பாடல் தினசரி பூஜையின்போது இசைக்கப்படும் என்றார் பிரசாத்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X