கொச்சி: கேரளாவில் தமிழக பஸ் எரிக்கப்பட்ட வழக்கில் என்ஐஏ (தேசிய புலனாய்வு ஏஜென்சி) இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி கேரள மாநிலம் கலமசேரியில் தமிழ் நாடு அரசுப் பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கில் மதானி கைது செய்யப்பட்டிருந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் பேருந்தை எரித்தனர்.
இந்த வழக்கு விசாரணையை என்ஐஏ நடத்தி வருகிறது. இந்நிலையில் என்ஐஏ இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ். விஜயகுமார் முன்பு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் மொத்தம் 13 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பெங்களூர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி என்று கருதப்படும் நசீர் தான் இந்த வழக்கின் முதல் குற்றவாளி. மதானியின் மனைவி சூபியா மதானி 10-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், 3 குற்றவாளிகள் தலைமறைவாகியுள்ளனர்.










